• Fri. Apr 26th, 2024

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலகபக்கவாத தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சார்பாக நந்தா அறக்கட்டளையின் தலைவர் வி சண்முகன் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து பக்கவாத தின விழிப்புணர்வு பேரணி நந்தா சென்ட்ரல் ஸ்கூல் வரை நடைபெற்றது.
இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட கூடுதல் மேஜிஸ்திரேட் சந்தோஷினி சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். பக்கவாதம் ஏற்படவதற்கான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம், இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், புகை பிடித்தல், மது அருந்துதல், துரித உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகியவை என்பதை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், மக்களுக்கு துண்டு பிரச்சாரங்களை அளித்தும், விழிப்புணர்வு கோஷமிட்டும் பேரணியை மேற்கொண்டனர். இந்த பேரணியில் நந்தா கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், செயலாளர் நந்தகுமார் பிரதீப், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் மணிவண்ணன், கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *