திருச்சியில் உலக இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியை டாக்டர் புரோஜா திருச்சி அஹான் டயக்னோஸ்டிக் மற்றும் |அட்லஸ் ஹாஸ்பிடல் மருத்துவர் கீதா சங்கரி ஜெயகேஷ் அவர்கள் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார் .
திருச்சி ஜல்லிக்கட்டு சாலையில் இருந்து தொடங்கி இந்த பேரணி திருச்சி தில்லை நகர் , புத்தூர் நான்கு ரோடு , அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் ஜல்லிக்கட்டு சாலை வந்தடைந்தது . இந்த விழிப்புணர்வு பேரணியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 165 க்கும் மேற்பட்ட இயன்முறை மருத்துவர்கள் பங்கேற்றனர் .
முடிவில் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் . பரிசுகளும் வழங்கப்பட்டது .