கோவையில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நடத்தும் “மே டென்டல் கார்னிவல்” நிகழ்ச்சி மே 15 முதல் 17 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

பொதுமக்களிடையே வாய் சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும். இந்த விழாவை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர், நரேந்திரன்,தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளாக பல் மருத்துவக் கண்காட்சி பல் ஆரோக்கியம் தொடர்பான மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்கவுரை, வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிபுணர்களால் வழங்கப்படும் விழிப்புணர்வு சொற்பொழிவுகள், விளையாட்டு போட்டிகள் வாயிலாக பல் சுகாதார விழிப்புணர்வு -குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளக்கூடிய உற்சாக நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.