• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விழிப்புணர்வு மற்றும் மாபெரும் இரத்ததான முகாம்

ByG.Suresh

Oct 20, 2024

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (சிவகங்கை) உடன் சிவகங்கை லயன்ஸ் கிளப் மற்றும் காரைக்குடி நியூஸ் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு மற்றும் மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆலோசனையின் படி இந்த நூறு நாள் சேலஞ்ச் விழிப்புணர்வு மற்றும் மாபெரும் இரத்த தான முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், (ADR buildings district court complex, Sivagangai) வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் ஜே. நடராஜன் தலைமையில் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி இரா. சுப்பையா முன்னிலை வகித்தார்.

மேலும் இந்த முகாமில் மகிளா விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி ஆர் கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ பசும்பொன் சண்முகையா, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி என். செந்தில் முரளி, சிவகங்கை சார்பு நீதிமன்றம் சார்பு நீதிபதி பி.வி. சாண்டில்யன், கூடுதல் மகிளா நீதிமன்றம் நீதிபதி வி. கபிலன்,
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ஆர். வெங்கடேஷ் பிரசாந்த், நீதித்துறை நடுவர் எண்.1 பி செல்வம், நீதித்துறை நடுவர் இ. தங்கமணி,
நீதித்துறை நடுவர் கூடுதல் மகிளா நீதிமன்றம் ஜே. ஆஃபரின் பேகம்,
நீதித்துறை நடுவர் ஜே. கார்மேக கண்ணன்,நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றம் (காரைக்குடி) ஏ. ரமேஷ், நீதித்துறை நடுவர் (தேவகோட்டை) ஆர் பிரேமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
லயன்ஸ் சங்கம் தலைவர் Ln.R விஸ்வநாதன் நோக்க உரை ஆற்றினார். சிவகங்கை வழக்கறிஞர் சங்கம் தலைவர் OL. ஜானகி ராமன் மற்றும் சிவகங்கை வழக்கறிஞர் சங்கம் செயலாளர் கே. சித்திரைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார். காரைக்குடி நியூஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் Ln.அன்புமதி நன்றி உரை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.