விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகவல் உரிமைச் சட்டம் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கட்டுரைபோட்டி நடத்தப்பட்டன.

அதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் குறித்தும் விபத்து களங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி அளித்தனர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமி, பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.
