மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வில், “நலம் தரும் யோகா” என்ற தலைப்பில், கோத்திரைசாமி நாயுடு கிருஷ்ணவேணி அம்மாள் கல்வி அறக்கட்டளை (மதுரை) சார்ந்த விஜயலட்சுமி கோகுலகிருஷ்ணன் யோகாவின் சிறப்பம்சங்களையும் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, திட்ட மாணவர்கள் ஆர்வமுடன் யோகப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் களப்பணிகளில் பங்கேற்று சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர்.

மேலும், “சத்துணவும் – சரிவிகித உணவும்” என்ற தலைப்பில் எலக்ட்ரோ ஹோமியோ சிகிச்சை நிபுணர் அனிதா மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.
