• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அவசர கால ஊர்தி சேவை செய்தமைக்கு விருது..,

ByKalamegam Viswanathan

Aug 15, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஏ எஸ் ஆம்புலன்ஸ் டாக்டர் அஜய் கண்ணன் நடத்தி வருகிறார் இளம் வயதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமங்கலம் மேலூர் சோழவந்தான் உள்ளிட்ட இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வருகிறார்.

விபத்து ஏற்பட்டால் அரசு அவசரகால ஊர்தி வருவதற்கு முன் இவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்கள். இதனை பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏ எஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கும் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த ஆம்புலன்ஸ் சேவை புரிந்ததற்காக மதுரை மாவட்ட ஆட்சியாளர் பிரவீன் குமார் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஐபிஎஸ் சிறந்த சேவைக்கான விருதினை ஏஎஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் அஜய் கண்ணனுக்கு இன்று சுதந்திர தின விழாவில் வழங்கினர்.

இளம் வயதில் சுதந்திர விழாவில் பெற்றது. இவர் ஆகும் அஜய் கண்ணன் கூறுகையில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும் மேலும் இந்த விருது வழங்கியது எனக்கு கௌரவப்படுத்தியது. மேலும் ஊக்கப்படுத்துவதாக தெரிவித்தார். சேவைகளை மேலும் விரிவு படுத்தி பல்வேறு பொதுமக்கள் உயிர் காத்திட பாடுபடுவேன் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.