• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதுரை குமர காண சபா டிரஸ்ட் சார்பாக விருது வழங்கும் விழா

Byகுமார்

Sep 26, 2022

மதுரை குமர காண சபா டிரஸ்ட் சார்பாக விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரையில் குமர காண சபா டிரஸ்ட் சார்பாக மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் வளாகத்தில் 25 ஆம் ஆண்டு புரட்டாசி மாத இசை நாட்டிய மற்றும் விருது வழங்கும் விழா விமர்சையாக நடை நடைபெற்றது. முதல் நிகழ்வாக உள்ளூர் மற்றும் வெளியூர் கலைஞர்களுக்கு பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
20 -21 ,22 ,23 மூன்று ஆண்டுகள் கணக்கில் கொண்டு 13 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது . ஸ்வர சங்கரலய பூபதி விருதை சங்கீத வித்வான் ராஜாராம் நாதஸ்வர வித்துவான் ராஜா மிருதங்க வித்வான் வலங்கைமான் தியாகராஜன் ஆகிய மூவரும் பெற்றனர்.
மதுரா கலாநிதி விருதை நாதஸ்வர வித்துவான் விஸ்வநாதன் புல்லாங்குழல் வித்துவான் கல்யாணகுமார் சென்னை வயலின் கலைஞர் கல்யாணிசங்கர் பெற்றனர். மதுரகலா சுடர் ஒளி விருதை நாதஸ்வர கலைஞர் சரஸ்வதி புல்லாங்குழல் கலைஞர் மீனாட்சி &பார்வதி வீணை கலைஞர் ஆனந்தி பூர்ண சந்திரன் தவில் கலைஞர் வெங்கடேஸ்வரன் வயலின் கலைஞர்கள் சச்சிதானந்தம் ஜெகதீசன் பெற்றனர் .
இந்தவிருது வழங்கும் விழாவிற்கு விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் சங்குமணி தலைமை தாங்கினார். கள்ளழகர் கோவில் துணை ஆணையர் அழகர்சாமி, நந்தினி நர்சிங் ஹோம் இயக்குனர் சுஜாதாசங்குமணி, மருத்துவர் பாஸ்கர்ராஜன், ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயா செயலாளர் வெங்கட்நாராயணன் மதுரை அட்சய பாத்த நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .சபா செயலாளர் பேராசிரியர் லஷ்மன்ராஜ் வரவேற்றார். பேராசிரியர் முரளி கிருஷ்ணன் நன்றி உரை வழங்கினார். இதைத்தொடர்ந்து பரதநாட்டிய ஆசிரியை சாந்தினி அருணகிரி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் ராமநாதபுரம் அரசு இசைக்கல்லூரி மிருதங்க பேராசிரியர் லட்சுமணன் குழுவினர் மிருதங்கம் வாசித்தனர்.