• Mon. May 6th, 2024

அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகர் பொதுமக்கள்.., அடிப்படை வசதி இல்லாமல் சாலையில் நாற்று நடும் போராட்டம்…

ByKalamegam Viswanathan

Nov 4, 2023

நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்து தீவில் வசிப்பது போல் அடிப்படை வசதி இல்லாமல் அரசுக்கு சாலையில் நாற்று நடும் போராட்டம் மூலம் கோரிக்கை விடும் அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகர் பொதுமக்கள் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு
திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகரில் உள்ள சந்தோஷ் நகர், மல்லிகை தெரு, மகாலட்சுமி நகர், ஜே. ஜே. நகர் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கியதில் குண்டும் குழியும் சாலை, சாலை வசதி கூறி பெண்கள் சேற்றில் இறங்கி நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ளது. விரிவாகப் பகுதியான சந்தோஷ் நகரில் ராணி மங்கம்மாள் நகர், ஜே. ஜே. நகர், மகாலட்சுமி நகர், மல்லிகை தெரு உள்ளிட்ட ஐந்தாயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மலையில் ஏற்கறவே குண்டு குழியுமான சாலை. மேலும், சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாமல் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியில் செல்ல முடியாத நிலையில் தீவில் வசிப்பது போல் தவித்து வருகின்றனர்.

மங்கம்மாள் நகரிலிருந்து மெயின் ரோடு வர ஒன்றை கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் ஆட்டோக்கள் வர மறுக்கின்றனர். மேலும், சேரும் சகதியில் சிக்கி வண்டியை மீட்க முடியாத நிலையில் உள்ளதால் கேஸ், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களும் உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் இப்பகுதி மக்கள் சாலை வசதி, சாக்கடை , குடிநீர் வசதி செய்து தரக்கோரி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல்வேறுமுறை மனு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சியின் கடைசி வார்டான நூறாவது வார்டு நகரின் கடைசி பகுதியாக உள்ளது.

ராணி மங்கம்மாள் நகர் சந்தோசம் நகர் உள்ளிட்ட இப்பகுதி மக்கள் தற்போது தொடர் மழையினால் மிகவும் சிரமத்தில் உள்ளனர் பல்வேறு முறை மாவட்ட நிர்வாகத்திடமும் மாநகராட்சியில் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று இப்பகுதி மக்கள் சேற்றில் இறங்கி நாற்றுநடும் போராட்டம் நடத்தினர்.

உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை அமைத்து தர மறுத்து விட்டால் விரைவில் சாலை மறியல் செய்வதாகவும் அறிவித்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்த சுந்தரி என்பவர் கூறுகையில் கடந்த 12 வருடங்களாக இங்கு வசித்து வருகிறோம் சாலை சாக்கடை குடிநீர் போன்ற இந்த வசதியும் இல்லை தண்ணீரே விலைக்கு வாங்கி தான் குடிக்க வேண்டிய நிலைமையில் உள்ளது.

தற்போது பெய்து வரும் தொடர்மழை இதனால் குண்டு குழிப்பான சாலையில் கேஸ் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளே வர மறுக்கின்றனர். ஆகையால் மிகவும் சிரமத்தில் உள்ளோம் என்று கூறினார்.

தமிழ்ச்செல்வி என்பவர் கூறுகையில் 10 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும் மதுரை மாநகராட்சி இடம் பல்வேறு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தனது கணவருக்கு டயாலிசிஸ் ஈசி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோக்கள் உள்ளே வருவதில்லை என்றும் இதனால் மிகவும் சிரமத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *