• Sun. May 5th, 2024

மதுரையில் விறுவிறுப்பாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

ByKalamegam Viswanathan

Jan 15, 2024

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை, துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஏராளமான காளைகள் பங்கேற்றன. காளைகள் சீறிப் பாய்ந்ததில், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி துவக்க நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பி ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை நகர காவல் துறை ஆணையர் பேராசிரியர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
வரும் 17-ஆம் தேதி புதன்கிழமை உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
எழுச்சிமிகு வரவேற்புக்கு ,
ஏற்பாடுகளை
அமைச்சர் பி மூர்த்தி பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் வாய்ந்த ஜல்லிக்கட்டாகும். வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு மிக்க இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை, கழக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்து சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கார்,  தங்கக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை வழங்க உள்ளார். சிறப்புமிக்க இந்த விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை, நாள்தோறும் நேரில் சென்று மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகின்றார். மேலும், நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, 

தமிழ் கலாச்சார கலைகளுடன் முரசு கொட்டும் முழங்க இரு வண்ணக் கொடி ஏந்தி எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடும் நடைபெற்று வருகிறது, அதன் விபரம்.
தைத் திருநாளாம் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா வருடம் தோறும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வெகு சிறப்பாக நடைபெறும். உலகப்புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு சோதனை வந்த காலத்தில் சட்டப்பேராட்டம் கண்டு மீட்டெடுத்து கொடுத்தவர் தலைவர் கலைஞர் , அது முதல் தொடர்ந்து சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வந்த நிலையில், அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் நீதிமன்ற நெறிமுறைகளை முறையாக கடைப்பிடத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவில்லை எனக் கூறி மீண்டும் சோதனை வந்தது.
அப்போது, தமிழர்களின் உணர்வுகளை அறிந்து தமிழர்களின் வீரமிகு விளையாட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்து அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பெருந்தலானோர் மத்தியில் மாபெரும் போராட்டம் நடத்தியது.
கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின.
அதை த்தொடர்ந்து, நாடு முழுவதும் ஒட்டுமொத்த தமிழர்களும் போராட்டம் கண்டு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்து அனைவரும் அறிவார்கள்.
இத்தனை பெருமை வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை, கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட உள்ளார். மேலும் சிறந்த காளைகளுக்கும், காளையர்களுக்கும் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பாகவும் கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சார்பாகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் தங்க மோதிரம் காசு ரொக்க பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இப்படி ஏராளமான பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் வழங்கி பாராட்ட உள்ளார்.

பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை, பந்தல்கால் பதித்த நாள் முதல் நாள்தோறும் நேரில் சென்று மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும்,  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சருமான பி.மூர்த்தி நேரில் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகின்றார்.

இதேபோன்று மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து வருகின்றார். பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்புடன் அமர்ந்து ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களும் தமிழர்களின் வீர விளையாட்டை பார்த்து வியக்கும் வகையில் அமர்ந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, சுகாதார மற்றும் குடிநீர் வசதிகளும் போதிய மருத்துவ வசதி ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து ஏற்பாடுகளும் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

அதேபோன்று ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க வருகை தரும் இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்கும் பொருட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வரவேற்பு கொடுக்கும் வகையிலும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *