தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கேபிஒய் பாலா, இவர் தன்னுடைய பணத்தில் சிரமப்படும் ஏழை எளிய பொதுமக்கள் பலருக்கு உதவி புரிந்து வருகிறார்.
கிராமப் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்த பாலா மீது சமூக வலைத்தளத்தில் திடீரென எதிர்ப்புகளும் கிளம்பியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படம் வெளியாகிய நிலையில் அவரை தவறாக சித்தரித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின.
இதற்கு பல்வேறு தரப்பினரும் நடிகர் பாலாவிற்கு ஆதரவு குரலும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் பாலா செய்யும் உதவிகளை பாராட்டி அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேனியை சேர்ந்த ஓட்டுநர் எழுதிய பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆண்டிபட்டி அருகே காண விளக்கு பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
நடிகர் பாலா செய்யும் உதவிகளை தவறாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைகள் கருத்துக்கள் வெளியான நிலையில் பொது மக்களுக்கு அவர் செய்யும் உதவிகளை போற்றும் விதமாக அவரை பாராட்டும் வகையில் அருண்குமார் எழுதி பாடிய பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.