மதுரை மாவட்டம் மேலமாத்தூர் அருகே மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து விக்கிரமங்கலம் சென்ற அரசு தாள்தள பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ சுக்கு நூறாக உடைந்து ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் வசந்தகுமார் வயது 19 சம்பவ இடத்தில் பலியானார்.
உடன் வந்தவர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் இருந்தவர்களை அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்






