• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெண்ணை கொடூரமாக தாக்கி கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவர் கைது

குமரி நித்திரவிளையில் பெண்ணை பிறப்புறுப்பில் கொடூரமாக தாக்கி கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாக்குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை தோப்பு பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான இப்ராஹீம் (39). இவரது ஆட்டோவில் அடிக்கடி சவாரி செல்லும் தூத்தூர் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 34 வயது பெண்.
இதில் இருவருக்கும் இடையே பழக்கமாகி நாளடைவில் தகாத உறவு ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட தகறாரில் தகாத உறவை அப்பெண் துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த பெண்ணின் கணவர் மீன் பிடிக்க சென்றதும், கணவர் மற்றும் பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில், அங்கு வந்த இப்ராஹீம் அப்பெண்ணுடன் ஏற்பட்ட தகறாரில், பெண்ணை தாக்கி அவரது பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியதில் அதில் இருந்து அதிக ரத்த போக்கு இருந்த நிலையில், இப்ராஹிம் தப்பி சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதுதொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாகி இருந்த இப்ராஹீமை தனிப்படை போலீஸார் தேடுதலில் கைது செய்யப்பட்டு, தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.