• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…

Byகாயத்ரி

May 27, 2022

லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே ஆச்சர்யத்திலும் வியப்பிலும் ஆழ்ந்துள்ளது. தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது கடை விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு புது டிரெண்டை உருவாக்கி ட்ரெண்ட் செட் செய்தார். இதுவரை விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த வெஜண்ட் சரவணன், தற்போது சினிமாவிலும் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி உள்ளார்.

தமிழில் இவர் நடிக்கும் முதல் படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். ஏற்கனவே அஜித்தின் உல்லாசம், ஷெரின் நடித்த விசில் போன்ற படங்களை இயக்கி உள்ள இவர்களுக்கு இது மூன்றாவது படமாகும். இப்படத்துக்கு தி லெஜண்ட் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருக்கிறார். மேலும் ரோபோ சங்கர், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, விவேக், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இப்படத்தில் நடித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து மொசலோ மொசலு மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வருகிற மே 29-ந் தேதி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ள நடிகைகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடிகைகள் பூஜா ஹெக்டே, ஹன்சிகா, தமன்னா, ராய் லட்சுமி, ஊர்வசி ரவ்துலா, யாஷிகா ஆனந்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய 10 பேர் கலந்துகொள்ள உள்ளார்களாம். லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே திகைத்துபோய் உள்ளது. அந்த நடிகைகள் அனைவரும் லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்சில் கவர்ச்சி நடனமும் ஆட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விழா மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.