• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்று பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்

ByA.Tamilselvan

Sep 17, 2022

பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயணங்களின்போது பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பிரதமர் மோடியின் பிறந்த தினமான இன்று (சனிக்கிழமை) முதல் 1,200 பரிசு பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த மாதம் (அக்டோர்) 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த ஏலத்தில் “pmmementos.gov.in” என்ற இணையதளம் மூலம் பங்கேற்கலாம். ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் சில பொருட்கள் டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிலையின் மாதிரி, விநாயகர் சிலை, அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி, காசி விஸ்வநாதர் கோவில் மாதிரி போன்றவை முக்கியமானவை ஆகும். இதைப்போல பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த விளையாட்டு நினைவுப் பொருட்களும் ஏலத்தில் விடப்படுகின்றன.