மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு நிர்வாகங்களை கண்டித்து சோழவந்தான் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 10 2 2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக நடைபெறுகிறது குறிப்பாக அதலபாதாலத்திற்கு சென்றுள்ள சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் பொது மக்களின் எந்த ஒரு கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என பொதுமக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது.
இது குறித்து பலமுறை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மனுக்களாகவும் கோரிக்கைகளாகவும் கொண்டு சென்ற நிலையில் தற்போது வரை தீர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்படி நாளை அதாவது 10.2.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஆகையால் இனிவரும் காலங்களிலாவது பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் போக்குவரத்து துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.










