காரைக்கால் தலைமை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை புதுச்சேரி அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி ஊதிய வழங்க வேண்டும், பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.








