• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு…சென்னை மேயர் அறிவிப்பு..

Byகாயத்ரி

May 14, 2022

சென்னையில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேடு பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இதையடுத்து இந்த மாதத்தின் இறுதி முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராமன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னை ராயபுரத்தில் உள்ள 5-ஆவது மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகளைப் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்துகொண்டு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். மேலும் சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, கழிவு நீர் பிரச்சினை மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.