பெரம்பலூர் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நீர் வரத்து பாதையை ஆக்கிரமிக்க முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெரம்பலூர் அன்னமங்கலம் கைகாட்டி அருகே தனியார் பால்பண்ணை இயங்கி வருகிறது. அந்தப் பால் பண்ணையின் தென்புறம் அரசுக்கு சொந்தமான நீர் வரத்து வாய்க்கால் கொல்லன் குட்டைக்கு செல்கிறது. அந்த குட்டையின் தென்புறம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று விவசாய நிலத்தை பிளாட்டுகளாக போட்டு விற்க விலைக்கு வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் வரத்து வாய்க்கால் ஏரியையும் ஆக்கிரமித்து பிளாட்டுகளை போட்டு எல்லை கற்களை நட
முயன்றதால் அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினர். மேலும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை அந்நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அரசு நிலத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
