• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்… கோவையில் தமிழ் கிருஷ்ணசாமி பேட்டி..,

BySeenu

Nov 16, 2023

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தமிழ் கிருஷ்ணசாமி என்பவர் இன்று, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்ததில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
பொதுமக்களுக்கு பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து வருகின்றது, குறிப்பாக இன்றைய தினம் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், போன் பே, ஜிபே, உள்ளிட்ட செயலிகளை தினமும் பயண்படுத்தும் நிலையில் இருக்கிறோம், இவ்வாறான செயலிகளை பயன்படுத்த முக்கிய காரணியாக வங்கி உள்ளது, வங்கியில் கணக்கு வைக்காமல் இந்த செயலிகளை பயண்படுத்த முடியாத நிலை உள்ளது, எனவே நாம் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருக்கிறோம், இது ஒரு புறம் இருக்க வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே வங்கி சார்பாக வாகன விபத்துகாப்பீடு மற்றும் உயிரிழப்பு காப்பீடு திட்டம் உள்ளது இதனை பற்றி யாருக்கும் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை, ஏன் வங்கி மேலாளர்களுக்கே இது சம்மந்தமாக எந்த தகவலும் இல்லை ஆனால் தனக்கு விபத்து ஏற்பட்டு, பல லட்சம் செலவு செய்து பின் வீட்டிற்க்கு வந்மு வங்கியில் இது குறித்து விண்ணப்பித்ததாகவும், என்னுடைய மனுவை சரியாக புரிந்து கொள்ளாமல் வங்கி நிர்வாகம் தன்னை அலைக்கழித்த நிலையில் ஆர்பிஐ அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன், தற்போது வங்கி நிர்வாகம் தங்களது தவறை புரிந்து கொண்டதாகவும், தனக்கு இழப்பீடு தொகை வழங்குவதாகவும், முறையாக நீதிமன்றம் மூலமாக அனுகி அதை பெற்று கொள்ளலாம் என்று கூறுவதாக கூறினார், மேலும் இது மாதிரியான உண்மைகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இன்று இந்த செய்தியாளர்களை சந்தித்துள்ளதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.