இமயம் முதல் குமரி வரை நாட்டின் எட்டுதிக்குகளிலும், கிறிஸ்தவ மிஷனரியால் அனைவருக்கும் கல்வி, விளையாட்டை கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் பரவலாக உள்ளது.

கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரிகள் நடத்தும். துவாரகா AUP_ பள்ளியில் உடன் கல்வி ஆசிரியராக, அருட்பணி சபீனா உள்ளார்.
பள்ளியில் மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது. மாணவிகளுக்கான போட்டியில். மாணவிகளை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில். ஆசிரியரும், அருட் கன்னியுமான சபீனா அருட் சகோதரியின் அடையாள உடையுடன் மாணவிகளுடன் பங்கேற்ற தடகள போட்டியில் கண் இமைக்கும் நேரத்தில்,மின்னல் வேகத்தில் தடை தாண்டும் போட்டியில் முதலாவதாக வந்து தங்க பதக்கம் பெற்றார்.

அருட்சகோதரி சபீனா பள்ளி மாணவியாக இருந்த 9_ம் வகுப்பில் பயிலும் போதே
தேசிய தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றது மட்டுமில்லாமல், சிறுவயதிலே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றவரின்
இதய ஆசை இயேசுவின் சபையில் அருட்பணி ஆற்றவேண்டும். அதே சமயத்தில்
பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகவேண்டும் என்ற சபீனா வின் இரண்டு கனவுகளையும் நிறைவேற்றியுள்ளது.