• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதேகொம் பின்னகம் தேசிய பெண்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மகளிர் தின விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 14, 2026

பெண்கள் கல்வி சமூக அறக்கட்டளை தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னகம் புதுச்சேரி இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின விழா காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

இவ் அமைப்பின் தலைவர் திருமதி எஸ் பத்மினி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
முன்னதாக திருமதி பிரபாவதி சுப்பையன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.M.H.நாஜிம் அவர்கள்
கலந்து கொண்டு இசை மகளிர் சுய உதவி குழு விற்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி கடனுதவியாக 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மேலும் பெண்களின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜெயந்திராஜன் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைக்கான பாதுகாப்பு பற்றிச் சிறப்புரையாற்றினார்.

தொழிலதிபர் சந்திரமோகன் நகரக்காவல் ஆய்வாளர் அறிவுச் செல்வன் , மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சியாமளா தேவி, வழக்கறிஞர் உமா மகேஸ்வரி, பேங்க் ஆப் இந்தியா மேலாளர் சண்முகப்பிரியா, ஆசிரியை மஞ்சுளா
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தனர். இந்த அமைப்பைச் சார்ந்த மகளிர் குழுக்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மகளிர் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக ஸ்ரீதேவி அவர்கள் நன்றியுரை கூறினார்.