• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவு

BySeenu

Nov 8, 2024

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொடர்ந்து கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. இதில் சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

அதனை தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. அதன்பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தார்.

திருக்கல்யாணத்தை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.