தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.
இன்று சட்டசபைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாடு அரசு தலைமை செயலக வளாகத்தில் தமிழ்நாட்டு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி செழியன், தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்க்க உள்ளனர். பின்னர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவப்பு கம்பள விரிப்புடன் சட்டசபைக்கு அழைத்துவரப்பட உள்ளார். காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி தமது உரையை வாசிப்பார். ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையை வாசித்ததும் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இந்த உரைகள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். இன்று நடக்கும் கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்வார்களா, புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன் வரிசைக்கு வருவாரா போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.