• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் – தொழிலாளர்களை காப்பாற்ற சென்றவர் உயிரிழப்பு…

BySeenu

Feb 9, 2024

கோவை உடையம்பாளையம் பகுதியில் அஸ்வின் அடுக்குமாடி குடியிருப்பு என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இன்று அந்த குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிக்காக குணா, ராம் ஆகிய 2 தொழிலாளிகளை மோகனசுந்தரலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் அழைத்து சென்றுள்ளார். அப்போது தொழிலாளர்கள் இருவரும், மூச்சுத்திணறுவதாக கூறியுள்ளனர்.

அப்போது இருவரையும் காப்பற்ற முயன்ற மோகனசுந்தரலிங்கம், மூச்சுத்திணறி செப்டிக் டேங்க்கில் விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இச்சம்பவத்தில் தொழிலாளர்கள் இருவரும் நலமுடன் உள்ளனர்.