• Sun. Jun 30th, 2024

கோவையில் ஆசியா நகை கண்காட்சி 2024

BySeenu

Jun 15, 2024

கோவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நுண் கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை, ஆசியா நகை கண்காட்சி 2024, கோவை நகருக்கு மீண்டும் திருமண மற்றும் விழாக்காலத்திற்கான வருகை தந்துள்ளது.
இந்தியாவின் மிகச்சிறந்த 30 நகை வடிவமைப்புகள் மற்றும் பெயர் பெற்ற நகை வகைகள் ஒரே இடத்தில் வாங்க முடியும். கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் விவான்டா ஓட்டலில், 2024 ஜூன் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடக்கிறது.ஆசியா நகை கண்காட்சி 2024, தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிரமான, முக்கியத்துவம் வாய்ந்த நகை கண்காட்சி மற்றும் விற்பனையாக உள்ளது.

இந்த கண்காட்சி கோவை ரேஸ்கோர்ஸ் ரோடில் உள்ள தாஜ்விவான்டா ஓட்டலில், 2014 ஜூன் 14, 15, 16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடக்கிறது. இந்த தனித்துவமிக்க கண்காட்சி முதல் முறையாக நடக்கிறது. எப்போதும் கண்டிராத நகை வடிவமைப்புகள், இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட நகைககள் ஒரே இடத்தில் வாங்க முடியும். ஆசியா நகை கண்காட்சி 2024ஐ, பேஷன் டிசைனர் மற்றும் நகை வடிவமைப்பாளர்அபர்ணா சுங்கு, ஜிடோ கோவை அமைப்பின் தலைவர் ராகேஷ் மேத்தா ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.ஆசியா நகை கண்காட்சி ஒரு முக்கியமான, தனித்துவமிக்க நிகழ்வாக நடக்கிறது. உயர்தர நுண்வகை தங்கம் மற்றும் வைர நகைகள் இடம் பெறுகிறது. அன்மையில் வெளியான நுண்தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பராம்பரிய, திருமண நகைகள் இடம் பெற்றுள்ளன இவை தவிர, ஆன்டிக், அரிதான கல்கள் பதித்த நகைகள், குண்டன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளன.
ஆசியா நகை கண்காட்சி, நகரில் நடக்கும் மிகவும் அருமையான நகை கண்காட்சி. அடுத்து வரும் திருமணம், விழாக்காலங்களுக்கு முன்பதிவுகள் செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *