• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா..,

ByKalamegam Viswanathan

Jun 7, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாளித்து வரும் ஓம் அரிய வீரஸ்வாமி, ஓம் கும்பத்து மாரியம்மன், வல்லாந் திருவரசு ஐயன்,, ஓம் பார்வத பத்தினி அம்மன், ஆகிய திருக்கோவில் அஷ்டபந்தனமகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி செந்தில் சிவாச்சாரியார் தலைமையில் சாமி பெட்டி வீட்டில் கணபதியாகவும், கோவிலில் கணபதியாகம், 2ம் நாள் கிராம தேவதை சாமி வழிபாடு, வழிகாட்டுக்கு சென்று தீர்த்தம் எடுத்து, பெட்டி வீட்டிற்கு வருதல், 3ம் நாள் விக்னேஸ்வர பூஜை, கடம் புறப்பாடு, புனித தீர்த்தங்கள் அழைப்பு செய்தல். அன்று மாலை முதல் காலையாக பூஜை, 4ம் நாள் கோபுர கலசம் பிரதிஷ்டை சிவா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்தல்- பாலிகை பூஜை நடைபெற்றது.

2ம் கால யாக பூஜை மாலை 3ம் காலயாக பூஜை இரவு பெட்டி வீட்டில் இருந்து புனித தீர்த்தமும் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு வந்து அடைந்தனர். 5ம் நாள் காலை கோ பூஜை, பொங்கல் வைத்து விக்னேஸ்வர பூஜை 4ம் காலயாக பூஜை பூர்ணாஹீதி சாற்றுமுறை பங்காளிகள் நலல் வேண்டி பிரார்த்தனை நடந்தது. பின்னர் மேள காலத்துடன் புனித நீர் குடங்கள் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்துகோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இங்கு உள்ள தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. பொருளாளர் பிரபு, பெரிய பூசாரி ஆறுமுகம், சின்ன பூசாரி சதீஷ், இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் மகா கும்பாபிஷே விழா பங்காளிகள் மற்றும் குடிமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.