• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசாங்கமே மது கடைகளை நடத்துவதால், மக்கள் வாழ்வாதாரம் எவ்வாறு முன்னேறும் என்கிற அச்சம் இருக்கிறது – பி.எம்.எஸ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் பேட்டி

Byகுமார்

Jan 29, 2024

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள பி எம் எஸ் அலுவலகத்தில் பாரதிய உழைப்பாளர்கள் யூனியன் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் மாநாடு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது, இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் மாவட்ட தலைவர் அன்பழகன் மாவட்ட துணை தலைவர் பாலு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பி.எம்.எஸ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் கூறியதாவது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு நடைபெறும். கோவில் மாநகரம் மதுரை திருப்பரங்குன்றத்தில் மாநாடு நடக்க இருக்கிறது. பிப்ரவரி 3, 4 ஆம் தேதிகளில் மாநாடு நடக்க இருக்கிறது. அதற்கான முன் ஏற்பாடு பணிகளின் தற்போதைய ஈடுபட்டு வருகிறோம், மகளிர் மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் என மாநாட்டிற்கு திட்டமிட்டுள்ளோம். மாநாட்டில் வழிமொழியை உள்ள முக்கிய தீர்மானங்கள், தொழிலாளர்களின் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள், அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகியுள்ளது, அமைப்புசாரா தொழிலாளர்களும் மிகவும் பாதிப்பாகி உள்ளனர், 17 சதவீதம் நாடு முழுவதும் வருமானத்தை ஈட்டி தருவது கட்டுமான ஒப்பந்த தொழிலாளர்கள் தான் ஆனால் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது, மது கலாச்சாரத்தால் தமிழகம் சீரழிந்துள்ளது, உடனடியாக டாஸ்மாக்கை நிரந்தரமாக
மூட முடியாது இருப்பினும் படிப்படியாக அதை மூடுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும், மது பழக்கத்தில் அடிமையாகி உள்ள இளைஞர்கள் தான், இதனால் குறைந்த வயதிலேயே விதவையாகும் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது அவருக்கு முக்கிய காரணம் டாஸ்மார்க். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களும் கட்டட வேலைக்கு செல்கின்றன. ஆண், பெண் இரு கட்டுமான தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் சேர்த்தால் 1500 ரூபாய் அது மாதம் முப்பதாயிரம் ரூபாய், ஆனால் இந்த பணம் முதல் முழுமையாக குடும்பத்திற்கு செல்வதில்லை. நேரடியாக டாஸ்மார்க் செல்கின்றது. அரசாங்கமே மது கடைகளை நடத்துவதால், மக்கள் வாழ்வாதாரம் எவ்வாறு முன்னேறும் என்கிற அச்சம் இருக்கிறது.