• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் பங்குனி விழாக்கான கலை நிகழ்ச்சிகள் ரத்து..,

ByKalamegam Viswanathan

Mar 19, 2026

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும்திருவிழா நடைபெற்றுவருகிறது. அதில் 15 நாட்கள் தொடர்ந்து கொண்டாடக்கூடிய ஒரே திருவிழாவாக பங்குனி பெருவிழா அமைந்து உள்ளது. திருவிழாவின் 13-ம் நாள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.

அந்த நாளில்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை அம்பாளின் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். திருவிழாவின் 14-வது நாளாக சிகர நிகழ்சியாக கிரிவலப்பாதையில் 3. கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மகா தேரோட்டம் நடைபெறும்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து தரிசனம் செய்வார்கள்.

இத்தகைய பங்குனி பெருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சன்னதிதெருவில் 16 கால் மண்டபம் வளாகத்தில் 15 நாட்களும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிமாணவ, மாணவிகளின் ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடைபெறும். இத்தகைய நிகழ்ச்சிகளை தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பக்தியாளர்கள் உபயமாக வழங்குவது வழக்கம்
கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்கள் ரத்து.

இதே போல இந்த ஆண்டும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்திட உபயதாரர்களும் முன்வந்தனர். வழக்கம் போல உபயதாரர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளுக்காக வண்ணமயமான சிறப்பு அழைப்பிதழ் (திருவிழா பத்திரிக்கை) தயார்படுத்தும் பணியில்கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அன்றுசட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேதிஅறிவிக்கப்பட்டது.

இதனையொட்டி தேர்தல் நன்னடத்தை வீதிக்கு உட்பட்டு பங்குனி பெருவிழாக்கான கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பக்தி சொற்பொழிவுகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகள் இதேசமயம் வருகின்ற 23-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி 15 நாட்களும்வழக்கம்போல பங்குனி பெருவிழா வெகுவிமர்ச்சியாக நடைபெறும்.

சுவாமி புறப்பாடு, பட்டாபிஷேகம்,திருக்கல்யாணம், மகா தேரோட்டம் உள்ளிட்டதிருவிழா நிகழ்ச்சிகள்நடை பெறும். திருவிழா ஏற்பாடுகளைகோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியாபாலாஜி தலைமையில்அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணிச்செல்வன்,பொம்ம தேவன்,ராமையா மற்றும் கோவில் துணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.