• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளை குறிவைத்து கற்பழிப்பு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது

ByKalamegam Viswanathan

Nov 25, 2024

சோழவந்தானில் 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளை குறிவைத்து கற்பழிப்பு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது. தப்பி ஓட முயன்ற போது வழுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டதாக போலீசார் தகவல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் வயது 25 இவர் கடந்த 2021 ல்சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் இரவில் கடை வாசலில் தூங்கிய ஆதரவற்ற மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சித்ததில் மூச்சு திணறி மூதாட்டி இறந்து விட்டார்.

இதில் சிறை சென்றவர் கடந்த 2023 நவம்பரில் வெளியே வந்த போதும் கருப்பட்டி பகுதியில் மூதாட்டிகளிடம் தவறாக நடக்க முயற்சித்து காயப்படுத்தி மீண்டும் கைதானதால் இவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சிறையில் இருந்து மீண்டும் வெளியே வந்தவர் சோழவந்தானில் தெற்கு ரத வீதி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பணம் கேட்டாரா இல்லை மூதாட்டியை கற்பழிக்க முயற்சி செய்தாரா என தெரியாத நிலையில், மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே அங்கிருந்த இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு சென்றுள்ளார்

இது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் மணிமாறனை கைது செய்ய முயன்ற போது தப்ப முயன்று கீழே விழுந்ததில் மணிமாறனுக்கு கை முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு பின்பு இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளை குறிவைத்து கற்பழிப்பு மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.