தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் ஒரு தனியார் அமைப்புடன் இணைந்து தங்கள் கிராமத்தை சுற்றிலும் பனை மர விதைகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். லட்சுமிபுரம் கிராமத்தை சுற்றியுள்ள 2 குளங்களின் கரைகளிலும் சாலை ஓரங்களிலும், ஊரைச் சுற்றியுள்ள பொது இடங்களிலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பனைமர பந்துவிதைகள் நடவு செய்தனர். பனை மரங்கள் பல தலைமுறைகளுக்கும் மரம், தண்டு, பூ, பழம், மட்டை, இலை என பனைமரத்தின் அனைத்து பகுதிகளும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டு மக்களுக்கு பயனளித்து, நூற்றாண்டுகளுக்கு மேல் பலன்தருவதால் பனை மரங்களை நடுவதில் லட்சுமிபுரம் கிராமத்து இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பனை விதை பந்துகளை நடவு செய்த இளைஞர்கள் பட்டாளம்…
