டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அடுத்ததாக ஆரியா நடிக்கும் படத்திற்க்கு கேப்டன் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான ‘டெடி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது கூட்டணி இணைந்துள்ள, படத்திற்கு “கேப்டன்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறும்போது, தான் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்திலும், தன் உயிரைக்கொடுத்து, உழைக்கும் நடிகர் ஆர்யா பற்றி நான் என்ன கூறுவது, அவர் நடிப்பு திறமை குறித்து ஊரே அறியும். “கேப்டன்” படத்தை பொறுத்தவரை இப்பாத்திரத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து முழு அர்ப்பணிப்பையும் தந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் அதனை ஒவ்வொரு படத்திலுமே மாறாமல் செய்து வருகிறார் ஆர்யா. இந்த திரைப்படம் இப்போது இருக்கும் ரசிகர் வட்டத்தை தாண்டி, பல மொழிகளிலும் அவரது ரசிகர் வட்டத்தை பெருக்கும் என்றார்.
கேப்டன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிபிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாதம் படக்குழுவினர் செல்லவுள்ளனர். இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.











; ?>)
; ?>)
; ?>)