விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மம்சாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பாறைப்பட்டி கிராமம். இக்கிராமத்திலுள்ள ஊரணி மற்றும் நீர்வரத்து பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளும், கோவில்களும், மண்டபமும், கழிப்பிடங்களும் கட்டப்பட்டிருந்தன.

நீண்டகால – பல வருடங்களாக ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மம்சாபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் முருகன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கு விசாரணையில் ஊரணியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 15- குடியிருப்பு வீடுகள்,2- கோவில்கள், கோவில்மண்டபம் மற்றும்2- கழிப்பிடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் வருவாய்த்துறையினர் போலீசாரின் உதவியோடு ஜேசிபி எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கிராமத்திற்குச் சென்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாதென வலியுறுத்தி, பள்ளி மாணவ, மாணவியரும் தாங்கள் பயிலும் பள்ளிகளுக்குச் செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்து, கிராமத்தினருடன் அழுத முகங்களோடு எதிர்ப்பு தெரிவித்ததுடன் மட்டுமின்றி, வருவாய் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாக நடத்தப்பட்ட போராட்டத்துடன் கூடிய சமரசப் பேச்சுவார்த்தையில் கிராமமக்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் கால அவகாசம் கேட்டதின் பேரில், ஒரு மாத காலத்திற்குள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு மாற்றிடங்களுக்கு செல்ல வேண்டு மெனவும், சமரசப் பேச்சுவார்த்தை தகவல் பற்றி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்ய வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில், கோவில் மண்டபமும், 2- கழிப்பிடங்களும் மட்டும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலமாக வருவாய் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)