• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளரா?வங்கிக்கு செல்ல தேவையில்லை.. வாட்ஸ் அப் போதும்!

ByA.Tamilselvan

Sep 8, 2022

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ) வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி தங்கள் கணக்கில் உள்ள இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட், கடந்த 5 பரிவர்த்தனைகள் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐயின் வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
எஸ்பிஐ வாட்ஸ்அப் சேவையில் பதிவு செய்யும் முறை:
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து WAREG A/C எண்ணை (9172089XXX) SMS அனுப்பவும். உங்கள் பதிவு முடிந்ததும், நீங்கள் SBI இன் WhatsApp வங்கி சேவையைப் பயன்படுத்தலாம்.
பதிவு செய்ததும், +919022690226 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என்று குறுந்தகவல் அனுப்பவும். அல்லது வாட்ஸ்அப்பில் ‘அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் வெற்றிகரமாக எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைக்காகப் பதிவு செய்துள்ளீர்கள்’ என்று வரும் குறுந்தகவலுக்கு பதில் அளிக்கவும்.
நீங்கள் பதிலளித்த உடன், ‘அன்புள்ள வாடிக்கையாளரே, SBI Whatsapp வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்’ என்ற பதிலை பெறுவீர்கள். இதன் பிறகு நீங்கள் கணக்கு இருப்பு தொகை, சிறு அறிக்கை ஆகியவற்றை வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம், வாடிக்கையாளர்கள் இனி வங்கி சேவைகளை பெற, வங்கி தொடர்பான வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.