• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பயமோ? சீமானுக்கு வருண்குமார் IPS கேள்வி!

சிலரைப் போல் பிச்சை எடுத்து வந்தது அல்ல IPS பதவி. இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, படித்து, உழைத்து பெற்ற பதவி இது. உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும்.

பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ?

காக்கிச் சட்டையை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் என சவால் விடுத்த சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.