• Wed. Jun 26th, 2024

தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்

Byவிஷா

May 24, 2024

தமிழ்நாட்டில் புதியதாக உருவாக இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதல்கட்டமாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், 2-ஆம் கட்டமாக பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் கடந்த மே 6 ஆம் தேதி நடந்துள்ளளது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *