• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டு

ByKalamegam Viswanathan

Jun 7, 2023

மதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு.!!!!
மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்டது உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. 836 மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் 31 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.5.5 ஏக்கர் பரப்பளவுடைய இப்பள்ளியானது, மேலூர் கல்வி மாவட்டத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 2வது பள்ளியாக திகழ்கிறது. எனினும், இங்கு போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.இதனை கருத்தில் கொண்டும், தாம் பணியாற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதியும் தலைமையாசிரியர் ந.அருணாசலம், ரூ. 10 லட்சம் சொந்த நிதியை வழங்க எண்ணினார்.அதனையொட்டி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மா.செள.சங்கீதாவிடம் காசோலையாக வழங்கினார்.தலைமையாசிரியரின் செயலை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.