• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனி அருகே பெற்ற தாய்க்கு 85 அடி கோவில் சிலை உலக அதிசியம் செய்த மகனுக்கு பாராட்டு.

ByI.Sekar

Mar 9, 2024

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற 18 சித்தர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் நாற்பத்து எண்ணாயிரம் ஆயிரம் ரிஷிமார்கள் தவம் புரிந்த சுருளி மலையில் தன்னை பெற்ற தாய்க்கு 85 உயர உலக அதிசயம் நிகழ்த்திய மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
சுருளியில் சக்திமிகு அன்னை ஸ்ரீ ஜெய மீனா திருக்கோவில் என்ற பெயரில் சுருளிப்பட்டி சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் டாக்டர் ஜெகந்த் சொந்த முயற்சியில் 85 அடி கோவில் மற்றும் சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பால விநாயகர் குருக்கள் ராமமூர்த்தி ஐயர் கலந்துகொண்டு கணபதி ஹோமம், சுதர்சன் ஹோமம், தன்வந்திரி நாராயண ஹோமம் ஆயுஷ் , ஹோமம் நவகிரக ஹோமம் மற்றும் அங்கு நிறுவப்பட்டுள்ள சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அழைத்தால் வருவேன் அனைத்தும் தருவேன் என்ற வாசகத்தில் பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் அன்னை ஸ்ரீ ஜெய மீனா ஒரு வயதில் தன் தாயை இழந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மனை தன் தாயாக நினைத்து பயணித்தவர். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தாயும் தெய்வமே அந்த வகையில் தன்மகன் ஜெகந்த் அதனை தொடர்ந்து ஷாஜகானை மிஞ்சிய அவரது கணவர் ஜெயராஜ் மாமியாரை மெஞ்சிய மருமகள் டாக்டர் மகாலட்சியும் சேர்ந்து 85 அடி உயரத்தில் கோவில் நிறுவப்பட்டு திறப்பு விழா நடத்திய சம்பவம் காண்போரை நெகிழ செய்தது. இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தன் தாயின் சிலையை திறந்து வைத்ததுடன் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி தன் தாயின் உடைய நோக்கம் உதவும் உள்ளமே எங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தளவில் எங்களது குடும்பம் உதவி செய்து வரும் என்று கூறினார்.இந்த விழாவில் குடும்பத்தார்கள், மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த சக்தி வாய்ந்த ஶ்ரீஜெய மீனா அன்னை திருக்கோவில் வளாகத்தில் விநாயகர்,101படி ஏறி சென்று சிவன் வழிபாடு செய்யும் விதத்தில், வெங்கடாசலபதி, மகாலட்சுமி,முருகன் , நவகிரகங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் அனைவரும் மனம் விட்டு வணங்கி என்னை அழைத்தால் வருவேன், அனைத்தும் தருவேன் என்ற வாசகத்தை நிலை நாட்ட வேண்டும் என்று நோக்கத்துடன் குடும்பத்தார்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.