• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய தனியார் மருத்துவர்.., அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!

ByKalamegam Viswanathan

Jul 2, 2023

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய் தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார்.

இன்றுடன் 786 வது நாளான இன்று, உலக டாக்டர் தினம் என்பதால், அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் கார்த்திக், மருத்துவமனையின் மருத்துவர் குமார், வெங்கடேசன் மற்றும் மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனமும் இணைந்து உணவு வழங்கினர்.

பூங்கா முருகன் கோவில் அருகே உள்ள சாலையோரவாசிகளுக்கும், மதுரை ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவின் அருகே நோயாளிகளின் உறவினர்களுக்கும் உணவினை வழங்கினர்.

தொடர்ந்து 786 வது நாளாக‌ உணவு வழங்கிய வரும் மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர்.