• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சங்கீத கலாநிதி விருது பெற்ற திருவாரூர் பக்தவச்சலத்திற்கு பாராட்டு விழா..!

ByKalamegam Viswanathan

Nov 18, 2023

மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி திருமண மண்டபத்தில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் மதுரை குமர கான சபா டிரஸ்ட் இணைந்து நடத்திய கர்நாடக இசை நிகழ்ச்சி மற்றும் சங்கீத வித்வான்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கலைமாமணி சி.எஸ்.சங்கரசிவம், சங்கீத வித்வான்கள் சீனிவாசா ஐயர், மிருதங்க வித்வான் பத்மஸ்ரீ.சி.எஸ். முருக பூபதி இவர்கள் நினைவாக சங்கீத கலாநிதி விருது பெற்ற கலை மாமணி திருவாரூர் பக்தவச்சலத்திற்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து திருவாரூர் எஸ்.கிரீஸ் அவர்களுக்கு குமர கான இசை மணி விருது வழங்ஙப்பட்டது.

திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம், எஸ்.கிரீஷ் பாட்டு, புதுக்கோட்டை அம்பிகா பிரசாத் வயலின், ஆலத்தூர் ராஜ் கணேஷ் கஞ்சிரா உள்ளிட்ட இசை கலைஞர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் சத்குரு சங்கீத வித்யாலயம் இசை கல்லூரி முதல்வர் முனைவர் தியாகராஜன் முன்னாள் முதல்வர் லதா வர்மா பேங்க் ஆப் பேங்க் ஆப் பரோடா மேலாளர்கள் பிரபாகரன் ராமமூர்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அணுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் மதுரை குமர கான சபா ட்ரஸ்ட் முனைவர் லஷ்மண்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.