

சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் நாகப்பட்டினம் ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி நிகிலா மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். சாதனை படைத்த மாணவியை கல்லூரி தாளாளர் நடராஜன், முதல்வர் கோமதி மற்றும் துணை முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

