மதுரை மாவட்டம் இளமனூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியை கனகலட்சுமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தமைக்காகக் கல்வி அமைச்சரிடம் பாராட்டுச் சான்றிதழும், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளில் இளமனூர் மேனிலைப்பள்ளி சிறந்த பள்ளியாகத் தேர்வுசெய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபாய் பரிசுபெறக் காரணமாக இருந்ததற்காகவும் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்குப் பெற்றோர் ஆசிரியர் கழகத்துணைத்தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்.கிராமக் கல்விக்குழுத் தலைவர் பாண்டிச்செல்வி முன்னிலை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் இலசபதி வரவேற்றார். ஆண்டார்கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
கல்விக்குழு உறுப்பினர் பத்மநாபன், தலைமையாசிரியர் பால்முருகன்,ஆசிரியை இராணி வாழ்த்தினர். தலைமையாசிரியர் கனகலட்சுமி ஏற்புரை வழங்கினார். விழாவை நல்லாசிரியர் மகேந்திரபாபு தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் முத்துராசா செய்தார். ஆசிரியை தேவி நன்றி கூறினார்.