தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சாம் பேட்மிண்டன் அகாடமியில், பேட்மிண்டன் விளையாட்டு போட்டியில், மாநில அளவில் தேர்வான மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கத்தில், சாம் பேட்மிண்டன் அகாடமி நிறுவனர் செந்தில் உமா காந்தன் வெற்றி பெற்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் குறித்து அறிமுக உரையாற்றினார்.
பேட்மிண்டன் போட்டியில் தஞ்சை மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநிலப் போட்டிக்கு தேர்வான, ப்ரணிதா (19 வயதுக்கு கீழானோர் ஒற்றையர் வின்னர்), ப்ரணிதா மற்றும் அபிநீவிகா (19 வயதுக்கு கீழானோர் இரட்டையர் வின்னர்)
ஆகியோரை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வாழ்த்திப் பேசி, சால்வை அணிவித்து, ரொக்கப் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், 11ஆவது வார்டு உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் லயன் வீ.மனோகரன், யாழினி செந்தில், திவ்யா அருள், சாம் அகாடமி பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் பெற்றோர்கள், விளையாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சாம் பேட்மிண்டன் அகாடமி நிறுவனர் ஆர்.அருள் முருகன் வரவேற்றார். நிறைவாக, சாம் பேட்மிண்டன் அகாடமி முதல்வர் எஸ்.நீலகண்டன் நன்றி கூறினார். விழாவில், மாணவ, மாணவிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.











; ?>)
; ?>)
; ?>)