• Thu. Apr 24th, 2025

குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில், பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா..!

ByKalamegam Viswanathan

Nov 13, 2023

குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் கடந்த கல்வி ஆண்டில் +2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா குளச்சல் எஸ்.பி.எம் ஹாலில் நடைபெற்றது.
விழாவுக்கு அறகட்டளை தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பிரநிதி. முகம்மது நஸீம் ,ஐ.யு.எம்.எல். மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது, நகர ஐ.யு.எம்.எல். துணை செயலாளர் முகம்மது ரியாஸ், அறகட்டளை நிர்வாக குழு உறுப்பினர் நைனா முகம்மது, ஐ.யு.எம்.எல் நகர பொருளாளர் செய்னுல் ஆப்தீன், நகர காங். தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறகட்டளை பொருளாளர் முகமது சுபேர் வரவேற்று பேசினர். அறகட்டளை நிர்வாக குழு உறுப்பினர் நியாஸ்கான் துவக்க உரை ஆற்றினர்.

குளச்சல் நகர மன்ற தலைவர் நசீர், ஐ.யு.எம்.எல்.மாவட்ட தலைவர் ஷாஜகான் , மாவட்ட செயலாளர் அப்துல் ரசீது, நகர தி.மு.க செயலாளர் நாகூர் கான், காங் சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் யூசப் கான், த.மு.மு.க. நகர செயலாளர் மாகின், மமக நகர செயலாளர் அபுதாய்ரு,  த.மு.மு.க. நகர பொருளாளர் யாசர் அரபாத்.   சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர்.  குளச்சல் நகராட்சி கவுன்சிலர்கள் ரஹீம், அன்வர் சாதாத் காயிதே மில்லத் மூத்த நிர்வாகி மீரான்.  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கன்னியாகுமரி பாராளுமன்றம்  எம்.பி விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடந்த கல்வி ஆண்டில் +2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  

எம். எஸ். எப் மாவட்ட அமைப்பாளர் முகமது மசூது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் குளச்சல் நகர ஐ.யு.எம்.எல் செயலாளர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார்.