அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கும், தங்களது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் தேர்ச்சி வேண்டுமென்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பளித்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 60000 ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக பணியின்றி வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றோம்.
இந்த சூழலில் பணியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தனியே சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த முடிவு ஆசிரியர் தகுதித் தேர்வை நீர்த்துப் போக செய்து விடும். ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் இன்னொரு நியமன தேர்வு எழுத வேண்டும் என்று கூடுதல் தேர்வுகளை இந்த அரசு எங்கள் மீது திணிப்பது ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் செயலாகும். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எங்களுக்கு மற்றொரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை ஏற்கனவே சொன்ன வாக்குறுதியின் அடிப்படையில் நீக்கிவிட்டு பணி நியமன ஆணைகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை நடத்த வேண்டும்.இதை தவிர்த்து தமிழக அரசு தனியே ஒரு தகுதி தேர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்தால் நியாயத்தை நிலைநாட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றார். பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் பிரபாகரன், மாநில செயலாளர் சண்முகப்பிரியா, மாநில பொருளாளர் ஹரிஹரசுதன் உட்பட பலர் உடனிருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)