தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 32 புதிய மகளிர் விடியல் பயணம் பேருந்துகள் மற்றும் 60 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சிவசங்கர், பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மதுரை எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய மகளிர் விடியல் பயணம் பேருந்துகள் (நகரப் பேருந்துகள்) இயக்குதல் மற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி 32 புதிய மகளிர் விடியல் பயணம் பேருந்துகள் (நகரப் பேருந்துகள்) துவக்கி வைத்து விழாப் பேரூரை ஆற்றினார்கள். மேலும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் 60 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார்.

இதில் அமைச்சர் சிவசங்கர் பேசும் போது;
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக போக்குவரத்துத் கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது இயற்கை எய்திய பணியாளர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதின் பேரில், அனைத்து போக்குவரத்து கழகத்திலும் மண்டல வாரியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரை மண்டலத்தில் 16 பணியாளர்களுக்கும், திண்டுக்கல் மண்டலத்தின் 28 பணியாளர்களுக்கும், விருதுநகர் மண்டலத்தின் 16 பணியாளர்களுக்கும் ஆக மொத்தம் மதுரை கோட்டத்தில் 60 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..,
அரசாங்கத்துடைய முக்கிய கடமைகளில் ஒன்று பொதுமக்களுக்கு இலவசமாகவோ இல்ல குறைந்த கட்டணத்திலையோ போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவது.
குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் இந்த போக்குவரத்து வசதி மூலம் வேலை வாய்ப்பு. அதனால் அவர்களுடைய பொருளாதார மேலாண்மையும் சிறப்பிக்கறதுக்கு செய்ய வேண்டிய கடமை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் புது வாகனங்கள் பேருந்துகள். இந்த ஆண்டும் பல புது வாகனங்களை பேருந்துகளை ஏற்பாடு செய்த தமிழக முதலமைச்சருக்கும் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் என் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் நான் நிதி அமைச்சராக இருக்கும் போது இந்த பணிகளில் சில முடிவுகள் சில ஏற்பாடுகள் செய்யப்பட்ட நினைவு எனக்கு வருகிறது. அதை சிறப்பாக தொடர்ந்து இன்றைக்கு இந்த புது பேருந்துகளும் இன்னும் வரும் காலங்களில் எலக்ட்ரிக் பஸ் உள்ளது.
இயற்கை சுற்றுச்சூழலுக்கு நல்ல ஒரு பணி செய்யும் வகையில் எலக்ட்ரிக் பஸ் அறிமுகப்படுத்தியதற்கு சூழ்நிலையும் இன்றைக்கு இங்கே இத்தனை புது பேருந்துகளை ஆரம்பித்துவிட்டு 32 பேருந்துகள் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல் 103 பேருக்கு வாரிசு அடிப்படையில் நியமனம் ஆணை வழங்கியிருக்கும் அமைச்சருக்கும் துறை அதிகாரிகளுக்கும் என் பாராட்டுக்கள்.

பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேச்சு..,
நமது தமிழக முதலமைச்சர் எல்லா துறையின் மூலமாக எல்லோரும் பெற வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கடந்த மாதம் தான் நம்முடைய மதுரை மாவட்டத்தில் இதே இடத்தில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்.
நம்முடைய போக்குவரத்து அமைச்சர் இன்றைக்கு அதே போல இப்போது இந்த மாதமும் இன்றைக்கு தொடங்கி இருக்கிறார்கள். இன்றைக்கு தொடங்கி இருக்கிறது மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு ஆயிரக்கணக்கான புதிய பேருந்துகளை வாங்கி அரசு நிதியிலும் ஜெர்மன் நிதி உதவியுடன் மக்களுக்கு மிக மிக பயனுள்ளதாக பேருந்துகள் இருக்க வேண்டும்.
அதிலேயும் குறிப்பாக பெண்களுக்கு மாணவர்களுக்கும் எந்த நேரத்திலும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று உள்ளதால் காலை நேரத்திலே மாலை நேரங்களில் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் செல்லக்கூடிய மாணவர்களுக்கு அதைப்போல கிராமப்புறங்களில் இருந்து மாணவி நகரங்களுக்கு வேலைக்கு செல்லக்கூடிய என் அருமை சகோதரிகளுக்கும் மிகப்பெரிய இன்னைக்கு நம்ம அரசு மூலமாக பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு செயல் அளவிலே எந்த அளவிற்கு பேருந்துகளை இயக்குவதன் மூலமாக மக்களுடைய பயணம் இன்றைக்கு ஏதுவாக இருப்பதைப் போல கொரோனா காலத்தில் நிப்பாட்டிய பேருந்துகள் இன்றைக்கு படிப்படியாக நம் ஆட்சி பொறுப்பு ஏற்றுவதற்கு பின்னால அதிலே கிராமங்களுக்கு செல்கிற பொழுது மக்களுடைய கோரிக்கைகளை இன்றைக்கு பேருந்து வேண்டுமென்று கேட்ட போது உடனடியாக அமைச்சர் இடத்திலையோ அந்த துறையினுடைய அதிகாரி இடத்திலே சொல்லுகிற போது உடனடியாக அந்த பேருந்துகளை விடக்கூடிய சூழ்நிலையை இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட நிலைமையை இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை சிவசங்கர் அவர்களுக்கும் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.