• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளிகளில் கணினி உதவியாளர்கள் நியமனம்

Byவிஷா

Jun 4, 2024

தமிழக அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப ஆய்வகங்களைக் கவனிப்பதற்காக 8,209 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் பொருட்டும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்றலை மேலும் இனிமையாக்கும் வகையிலும் 22,933 ஸ்மார்ட் போர்டுகளும், 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தொழில்நுட்ப ஆய்வகங்களை கவனிப்பதற்காக 8209 கணினி உதவியாளர்கள் கெல்ட்ரான் என்ற தனியார் நிறுவனம் மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். அவர்களை தேர்வுசெய்வதற்கான கணினிவழி தேர்வு 5-ம் தேதி (புதன்கிழமை) அந்நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்படும் இந்த கணினி உதவியாளர்கள் 5 ஆண்டு காலம் பணியில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.