• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

செம்மண் கிராவலை திருடி விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆண்டிபட்டி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

ByJeisriRam

May 26, 2024

பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் மண் செம்மண் கிராவலை திருட்டுத்தனமாக இரவில் அள்ளி விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமமான பாலக்கோம்பையை சேர்ந்த விவசாய தம்பதியினர் வேல்முருகன் கோமதி

அவர்களுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டம் மற்றும் காடு கிராமத்தின் அருகே உள்ளது.

இந்தத் தோட்டத்தில் தினந்தோறும் இரவில் அதே கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் அரசு அனுமதி பெறாமலும் திருட்டுத்தனமாகவும் பட்டா நிலத்தில் செம்மண் மண் கிராவல் அள்ளி ஆண்டிபட்டி மற்றும் தேனி பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வருகிறார்.

மேலும் இதேபோல பல்வேறு இடங்களிலும் இரவில் திருட்டுத்தனமாக மண் மற்றும் செம்மண் கிராவல் அள்ளி தொடர்ந்து விற்பனை செய்து தமிழக அரசை ஏமாற்றியும் அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியும் வருகிறார்.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பலமுறை ஆண்டிபட்டி ராஜதானி காவல்துறையினரிடமும் வருவாய் துறையினரிடமும் பலமுறை புகார் கூறியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தினமும் இரவில் இதுபோன்று ஏராளமான அளவில் மண் திருடப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து விவசாயி கோமதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருட்டுத்தனமாக மணல் திருடி விற்பனை செய்யும் காளிராஜ் மீது புகார் மனு அளித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியராவது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தையும் பாலக்கோம்பை பகுதி விவசாயத்தையும் காப்பாற்றுவாரா என்பது அவர் எடுக்கும் நடவடிக்கையில் தான் தெரிய வரும் என வேதனையோடு ஆண்டிபட்டி விவசாயிகள் காத்திருக்கின்றனர்