ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், ஆவடி காவல் ஆணையரகம் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பத்தயம் ஆவடி காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்டது.

இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் .கி.சங்கர், அவர்கள் முன்னிலையில் மாணவ மாணவிகளால் போதை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான ஒட்டப்பந்தய போட்டியினை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். மேலும் ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாடல் ஒன்றும் காவல் ஆணையாளர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இவ்விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியில் 58 கல்லூரிகளை சேர்ந்த Anti-Drug Clubs உறுப்பினர்கள் மூலமாக 1215 மாணவர்கள் ஆண்கள் பிரிவிலும் 624 மாணவிகள் பெண்கள் பிரிவிலும் மொத்தம் 1839 மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் திருமுல்லைவாயல் SM நகர், போலீஸ் கன்வென்சன் சென்டரில் தொடங்கி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பரணி உணவகம் வரை சென்று மீண்டும் போலீஸ் கன்வென்சன் சென்டரில் முடிவடையும் வகையில் 5 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலாவதாக வந்த முத்தமிழ்செல்வன் என்பவருக்கு ரூ.5000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும், இரண்டாவதாக வந்த விக்கி என்பவருக்கு ரூ.4000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் மூன்றாவதாக வந்த விஷால் என்பவருக்கு ரூ.3000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும், 4 முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா .2000 ரொக்கப் பரிசுடன் சான்றிதழ்களும், 11 முதல் 35 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.1000 ரொக்க பரிசும் சான்றிதழ்களையும் காவல் ஆணையாளர் அவர்களால் வழங்கப்பட்டன.

பெண்கள் பிரிவில் முதலாவதாக வந்த ஐஸ்வர்யா என்பவருக்கு ரூ.5000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும், இரண்டாவதாக வந்த விஷாலி என்பவருக்கு ரூ.4000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் மூன்றாவதாக வந்த ஷாலு என்பவருக்கு ரூ.3000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும், 4 முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு தலா ரூ.2000 ரொக்க பரிசுடன் சான்றிதழ்களும், 11 முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு தல ரூ.1000 ரொக்க பரிசுடன் சான்றிதழ்களும், சிறப்பு பரிசாக மாற்றுத்திறனாளி மாணவியான லட்சுமி பிரியா என்பவருக்கு ரூ.2000 ரொக்க பரிசும் சான்றிதழும், மேலும் இவ்விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.