• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர் பெயரில் மற்றுமொரு பொன்னியின் செல்வன் இன்று தொடக்கம்

எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
எம்.ஜி.ஆர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார் அவரது விருப்பம் கடைசிவரை நிறைவேறவில்லை.

பொன்னியின் செல்வன் நாவல் நாட்டுடைமையாக்கப்பட்ட பின்னர் பலரும் அதனை திரைப்படமாக்க, தொலைக்காட்சி தொடராக தயாரிக்க முயற்சி செய்தனர் ஆனால் எவராலும் அதனை செய்ய முடியவில்லைஇயக்குநர் மணிரத்னம் முதல் பிரதி அடிப்படையில் லைகா நிறுவனத்திற்காக இயக்கி தயாரித்திருக்கிறார் இதன் முதல்பாகம் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில்ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் அஜய் பிரதீப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் உதவியுடன் ஸ்ரீநிதி அஜய் இந்த படத்தை தான் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளார்
பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள பொன்னியின் செல்வன் ஐந்து மொழிகளில்வெளியாகவுள்ளதாகவும்,வெப்சீரிஸ் 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்றும், இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக இப்படம் வெளியிடப்படும் என்கிறார் இயக்குனர் அஜய் பிரதீப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி செய்யவுள்ளார்.

பாகுபலி புகழ் விஸ்வநாத் சுந்தரம் மற்றும் சண்முகவேல் ஆகியோர் ஓவிய சித்திரங்களைவடிவமைக்க உள்ளனர் எனக் கூறியுள்ளார்எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று (ஜனவரி 17) இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்று அஜய் பிரதீப் கூறினார்.

எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, மூன்று போஸ்டர்களும் வெளியிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய லட்சிய கதாபாத்திரங்களான அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் வேடங்களில் இந்த போஸ்டர்களில் அவர் இடம் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற எழுத்தாளரான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இந்த பிரமாண்ட படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர் மற்றும் கலைஞரை இயக்குநர் அஜய் பிரதீப் தனது மானசீக குருவாக நினைப்பதால் இந்தப் படைப்பை அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளஅஜய் பிரதீப் எம் ஜி ஆர் உடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.